ADDED : ஏப் 15, 2026 06:27 AM

தர்க்கரீதியான முரண்பாடு!
எஸ்.ஐ.ஆர்., நடைமுறையின் கீழ் குறிப்பிடப்படும் தர்க்கரீதியான முரண்பாடு என்பது, தேர்தல் கமிஷனின் கட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சொல் அல்ல. இது, பீஹாரில் பயன்படுத்தாத நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் பா.ஜ.,வுக்கு சாதகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
தவறான கொள்கை!
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு, 5 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், வேலை வாய்ப்பின்மைக்கான உதவித்தொகையை பெற 84 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த அரசின் ஊழல், தவறான நிர்வாக கொள்கைகளே பா.ஜ., காலுான்ற வழிவகுத்துள்ளது.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
நிராகரியுங்கள்!
தங்களுக்கு சாதகமான தொகுதி மறுவரையறை மூலம், 2029 லோக்சபா தேர்தலில் வெற்றி பெறவே, பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை பார்லி.,யில் கொண்டு வர, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு விரும்புகிறது. அத்தகைய முன்மொழிவை அடியோடு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நிராகரிக்க வேண்டும்.
கபில் சிபல் ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,
