ADDED : ஏப் 08, 2026 12:22 AM

மத நம்பிக்கையை மதிக்கணும்!
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கில், மக்களின் நம்பிக்கையை சட்டம் மதிக்க வேண்டும். சட்டம் என்பது தர்க்கத்தின் அடி ப்படையில் அமைந்தது. ஆனால் மதம், நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. எனவே, சட்டத்தை விட நம்பிக்கைக்கான அளவுகோல்கள் மாறுபட்டவை.
சசி தரூர் லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
கல்வி முறை சீரழிவு!
மேற்கு வங்கத்தில் மதிய உணவு திட்டம், புத்தகங்கள் மற்றும் சீருடைகளுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை, ஆளும் திரிணமுல் காங்., தன் கட்சி பணிகளுக்காக செலவிட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் கல்வி முறை முற்றிலும் சீரழிந்துள்ளது. 15 ஆண்டு கால மம்தா ஆட்சி, மாநிலத்தின் கல்வி பெருமை யை அழித்து விட்டது.
தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
வெட்கக்கேடு!
சட்டசபை தோல்வி பயத்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்காளர்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறார். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்க அவர் விரும்பவில்லை. வன்முறையை துாண்டும் வகையில் பேசி வருகிறார். ஒரு முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வெட்கக்கேடு.
ரவிசங்கர் பிரசாத் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
