
யாருக்கும் சந்தேகம் இல்லை!
கடந்த இரண்டு மாதங்களில், 11 மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளேன். அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளேன். மூன்றாவது முறையாக மோடி, பிரதமர் பதவியில் அமர்வார் என்பதில் நாட்டு மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
ஏழு வாக்குறுதிகள்!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய் உதவித்தொகை, இலவச காஸ் சிலிண்டர் ஆகியவை இவற்றில் முக்கியமானவை.
நர லோகேஷ்
தேசிய செயலர், தெலுங்கு தேசம் கட்சி
மஹாராஷ்டிராவுக்கும் இதே கதி!
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவுக்கும் உரிய வரி பங்கீட்டை மத்திய அரசு ஒதுக்கவில்லை. வரியாக, மஹாராஷ்டிரா அரசு, 100 பைசா அளித்தால், அதில், 7 பைசாவை மட்டுமே மத்திய அரசு திருப்பி தருகிறது.
உத்தவ் தாக்கரே
தலைவர், உத்தவ் பாலா சாகேப் தாக்கரே சிவசேனா