
ரூ.3 லட்சம் கோடி இலக்கு!
இந்த ஆண்டு, நம் ராணுவ தளவாட உற்பத்தி, 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கிறோம். 2029-ம் ஆண்டுக்குள், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த ராணுவத் திறன் போருக்காக அல்ல; தற்காப்புக்கானது.
ராஜ்நாத் சிங்
ராணுவ அமைச்சர், பா.ஜ.,
சிறைக்கு செல்வர்!
ஊழலை ஒழித்து, ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது. சோனியா குடும்பத்தினர் ஊழல் செய்து பணத்தைக் குவித்து வைத்திருந்தால் ஒவ்வொரு பைசாவும் அவர்களிடமிருந்து மீட்கப்படும்.
கவுரவ் பாட்டியா
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
400 ரூபாய் கூலி!
மஹாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த நிதியையே ஒதுக்குகிறது. மேலும், 7 கோடி பேரை திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது. ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, 400 ரூபாய் கூலியும், ஆண்டுக்கு, 150 நாள் வேலையும் வழங்க வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்

