
முன் மாதிரி மாநிலம்!
உத்தர பிரதேசத்தில் பராமரிக்கப்படும் சட்டம் - ஒழுங்கு, மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக உள்ளன. இங்கு எங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை, கடந்த எட்டரை ஆண்டுகளில் நிரூபித்துள்ளோம். இங்கு நிலவும் பாதுகாப்பு உணர்வால் மாநிலத்தில் முதலீடு அதிகரித்துள்ளதுடன், உட்கட்டமைப்பும் வளர்ச்சிஅடைந்துள்ளது. யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,
வெறுப்பை பரப்புகிறது!
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கமும், பயங்கரவாத அமைப்பான அல் குவைதாவும் ஒரே கொள்கை கொண்டவை. இரு அமைப்புகளும் மக்களிடம் வெறுப்பை பரப்புகின்றன. 140 ஆண்டு கால வரலாற்றை கொண்ட ஒற்றுமைக்கும் மக்கள் இயக்கத்திற்கும் முன்மாதிரியாக திகழும் காங்கிரஸ், வெறுப்பு அமைப்புகளிடம் கற்க என்ன இருக்கிறது. மாணிக்கம் தாகூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
தாராள ஒப்பந்தம் வேண்டாம்!
நியூசிலாந்துடன் செய்யப்பட்டுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தம், காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் எந்த ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தத்தையும் மத்திய அரசு செய்யக்கூடாது. இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் ஜம்மு - காஷ்மீரின் தோட்டக்கலை முதுகெலும்பை அழிக்கும். மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

