
ஒருபோதும் கட்டப்படாது! நாட்டில் பாபர் மசூதி ஒருபோதும் மீண்டும் கட்டப்படாது. அதை பற்றி கனவில் கூட நினைக்க வேண்டாம். நாட்டில் உள்ள விதிகளின்படி வாழ கற்றுக்கொள்ளுங்கள். சட்டத்திற்கு பணிந்து நடங்கள். யாராவது விதிகளை மீறினால், அந்த பாதை அவர்களை நேரடியாக நரகத்திற்கு அழைத்துச் செல்லும். யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
துாக்கியெறிய வேண்டிய நேரமிது! லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் துாண்டுதலின்படியே பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிடும் முயற்சி நடந்தது. பிரதமரை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். என்ன மாதிரியான மனநிலை இது? ராகுலையும், காங்கிரசையும் நாட்டின் அரசியலில் இருந்தே துாக்கி வெளியேற்ற வேண்டிய நேரமிது. சம்பித் பத்ரா லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
பயத்தால் வந்தனர்! மொழி உரிமைக்காக போராடுவது ஒரு நோய் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கருதினால், நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவுக்கு வந்தவர்கள் அன்பால் வரவில்லை; பயத்தால் வந்தனர். ராஜ் தாக்கரே தலைவர், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா

