ADDED : ஏப் 04, 2026 01:53 AM

பொது சிவில் சட்டம்! அசாம் வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக செல்ல பா.ஜ.,வை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம். ஊடுருவல்காரர்கள் நான்கு முறை திருமணம் செய்வதை தடுப்போம். அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
பிரதமருக்கு நன்றி! மகளிர் இட ஒதுக்கீடுக்கு நாங்கள் துவக்கத்தில் இருந்தே ஆதரவு அளித்து வருகிறோம். இதை உடனடியாக நிறை வேற்ற, பார்லி., சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட முடிவெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என, நம்புகிறோம். இதில் அரசியல் செய்யக் கூடாது. சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி கட்சி
தகுதி இல்லை! தெலுங்கானாவில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அம்மாநில மக்கள் அவதிப்படுகின்றனர். அப்படியிருக்கையில், தெலுங்கானாவை விட சிறப்பாக செயல்படும் கேரளாவுக்கு பாடம் எடுக்க அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எந்த தகுதியும் இல்லை. பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்.கம்யூ., கட்சி
