ADDED : ஏப் 18, 2026 11:46 PM

பெண்களுக்கு எதிரான கட்சி என்ற கரும்புள்ளியை காங்., தாங்கி நிற்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததை, அக்கட்சி கொண்டாடுவது அவமானகரமானது; கண்டிக்கத்தக்கது. இது, அக்கட்சியின் பெண்கள் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இதற்காக காங்., ஜனநாயக ரீதியில் தண்டிக்கப்படும்.
கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
தவற விட்டு விட்டோம்!
லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டது, தென் மாநிலங்களுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் சாதித்தது என்ன? 2026 மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நடந்தால், தெ ன் மாநிலங்களுக்கு தான் பாதிப்பு. நல்ல வாய்ப் பை தவற விட்டு விட்டோ ம்.
ஜெகன் மோகன் ரெட்டி தலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி
துளி கூட உண்மையில்லை!
தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அதில், துளியும் உண்மை இல்லை. பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். லோக்சபா தொகுதிகள், 543 ஆக இருந்தாலும், 850 ஆக இருந்தாலும் பா.ஜ., தான் வெற்றி பெறும்.
பிரஹலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,
