ADDED : மே 22, 2026 01:40 AM

கூட்டத்தை கூட்டுங்கள்! பார்லிமென்டில் சிறப்பு கூட்டத் தொடரை உடனடியாக கூட்டி, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும். கடந்த 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவுக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் 100 சதவீதம் ஆதரவு அளித்தன. ஆனால், தே.ஜ., கூட்டணி அதை மிகவும் சிக்கலாக்கியது. ரேவந்த் ரெட்டி தெலு ங்கானா முதல்வர், காங்கிரஸ்
தோல்வியே காரணம்! நம் நாட்டில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவை மக்களை கடும் நிதி நெருக்கடியின் விளிம்புக்கு தள்ளியுள்ளன. அரசின் பொருளாதார கொள்கைகள் தோல்வி அடைந்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. ஹரிஷ் ராவத் மூத்த தலைவர், காங்கிரஸ்
எதிர்மறையான மனநிலை! சர்வதேச தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை பெரிதும் நம்புகின்றனர். ஆனால், காங்., - எம்.பி., ராகுலோ, தன் வசைபாடும் கருத்துகளால், ஒரு எதிர்மறையான மனநிலையை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். மக்கள் அவரை தொடர்ந்து நிராகரித்து வருவதால், விரக்தியில் பிரதமருக்கு எதிரான கருத்துகளை ராகுல் பரப்புகிறார். பீயூஷ் கோயல் மத்திய அமைச்சர், பா.ஜ.,
