UPDATED : ஜூன் 16, 2026 11:34 AM
ADDED : ஜூன் 15, 2026 10:02 PM

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். கூட்டணியின் தலைமை பொறுப்பை ராகுலிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திரா உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ., போன்ற கட்சியை தடை செய்திருப்பார். அசோக் கெலாட் மூத்த தலைவர், காங்கிரஸ்
அரசியல் சுயலாபம்!
திரிணமுல் காங்கிரசில் இருந்து 20 லோக்சபா எம்.பி.,க்களும், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களும் வெளியேறிய நிலையில், அக்கட்சியின் சித்தாந்தம், தார்மிக பொறுப்பு தொடர்பாக கேள்வி எழுகிறது. நீங்கள் நாட்டிற்காக பணியாற்ற விரும்புகிறீர்களா, அரசியல் சுயலாபத்திற்காக செயல்படுகிறீர்களா என சுயபரிசோதனை செய்ய வேண்டும். ரஞ்சித் ரஞ்சன் ராஜ்யசபா எம்.பி., - காங்.,
நல்ல வாய்ப்பு!
அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் ஒவ்வொரு யாத்ரீகரும் காஷ்மீரின் விருந்தினர்கள். இந்த யாத்திரைக்கு வருவோரை ராணுவம் மட்டுமின்றி காஷ்மீர் மக்களும் இணைந்து பாதுகாக்க வேண்டும். நாடு முழுதும் அதிகரித்து வரும் வெறுப்புணர்வு, பிரிவினைக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
