சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயம் : விளக்கம் வேண்டும்!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயம் : விளக்கம் வேண்டும்!
UPDATED : ஜூன் 28, 2026 08:07 PM
ADDED : ஜூன் 28, 2026 08:01 PM

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமானது குறித்து சிலர் கேரள அரசை தினமும் விமர்சிக்கின்றனர். அவர்களது உணர்வு எங்களுக்கு புரிகிறது. மத்தியில் ஆளும் கட்சியினராக உள்ள அவர்கள், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கம் திருடப்பட்டது தொடர்பாக விளக்க வேண்டும். கே. முரளிதரன் கேரள தேவஸ்வம் அமைச்சர், காங்.,
பெயரளவுக்கு முதல்வர்!
பீஹாரில் ஊழலும், குற்றங்களும் மலிந்துள்ளன. நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமாவதுடன், மேம்பாட்டு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில குறிபிட்ட அதிகாரிகள் தான் அரசை நடத்துகின்றனர். திறமை இல்லாத சாம்ராட் சவுத்திரி பெயருக்கு தான் முதல்வராக உள்ளார். தேஜஸ்வி யாதவ் தேசிய செயல் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
ஹிந்துத்துவாவுக்கு துரோகம்!
நீண்ட போராட்டத்துக்கு பின் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலை வர்த்தகமயமாக்கி, ஹிந்துத்துவா சித்தாந்தத்துக்கு, பா.ஜ., துரோகம் செய்துள்ளது. அவர்கள் இந்த கோவிலை அதே இடத்தில் ஏன் கட்ட விரும்பினார்கள் என்பது இப்போது புரிகிறது. உத்தவ் தாக்கரே தலைவர், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு
