UPDATED : ஜூலை 18, 2026 09:41 PM
ADDED : ஜூலை 18, 2026 08:44 PM

உள்நாட்டு ராணுவ உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், ஒரு நம்பகமான உலகளாவிய ராணுவ கூட்டாளியாக நம் நாடு உருவெடுத்து வருகிறது. இந்திய பெருங்கடல் முதல் இந்தோ- - பசிபிக் பிராந்தியம் வரை, தன் இருப்பை நம் நாடு விரிவுபடுத்தி வருகிறது. நம் ராணுவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
24 மணி நேரமும் செயல்படும்!
ஹரியானாவில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, அனைத்து நிர்வாக மட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு அமைக்கப்படும். இக்குழு, 24 மணி நேரமும் செயல்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன வசதிகளுடன் கூடிய போதைப்பொருள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். நயாப் சிங் சைனி ஹரியானா முதல்வர், பா.ஜ.,
ஜனநாயக கொலையாளிகள்!
பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை மத்திய பா.ஜ., அரசு பெறுவதற்கு உதவும் எம்.பி.,க்கள், ஜனநாயகத்தின் கொலையாளிகள். வரலாற்றில் அவர்களின் பெயர்கள் கருப்பு எழுத்துக்களால் எழுதப்படும். பா.ஜ.,வின் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும். கபில் சிபல் ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,
