தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தீர்மானிக்க முடியாது!

தீர்மானிக்க முடியாது!

தீர்மானிக்க முடியாது!


UPDATED : ஆக 07, 2026 07:50 PM

ADDED : ஆக 07, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2026 07:50 PM ADDED : ஆக 07, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சபைக்கு எந்த அமைச்சர் வர வேண்டும், யார் பதிலளிக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தீர்மானிக்க முடியாது. அதை அரசும், சபாநாயகரும் தான் முடிவு செய்வர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அவர் வந்து பதிலளித்தால், எதிர்க்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஓடி விடுவர். கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,



அறிவுரை வேண்டாம்!

இளம் தலைமுறையினருக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அறிவுரை கூற தேவையில்லை. அவர் நற்சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. மாணவர்கள் மீதான தடியடியால், மத்திய அமைச்சர் அமித் ஷா பயந்து போயுள்ளார். அதனால் தான், பார்லி.,யின் இரு சபைகளுக்கும் வர மறுக்கிறார். பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்



தகுதி இல்லை!

நம் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதை பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிறுத்த வேண்டும். முதலில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். எங்களுக்கு அறிவுரை கூற அவருக்கு தகுதி இல்லை. ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us