தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அவதுாறு பரப்பும் காங்.!

அவதுாறு பரப்பும் காங்.!

அவதுாறு பரப்பும் காங்.!


UPDATED : ஆக 10, 2026 11:35 PM

ADDED : ஆக 10, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 11:35 PM ADDED : ஆக 10, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை கொண்டு வருவது அவசியம். இது, கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என, அரசியல் காரணங்களுக்காக காங்., அவதுாறு பரப்பி வருகிறது. நேர்மையாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு, இதனால் எந்த சிரமமும் ஏற்படாது. தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,

அமித் ஷா விளக்கமளிக்கணும்!

டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தடியடி விவகாரம் குறித்து, பார்லிமென்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை, பார்லி., முடக்கம் தொடரும். இதை விடுத்து, மற்ற விவகாரங்கள் பற்றி அமித் ஷா பேசினால், நிச்சயமாக அமளியில் ஈடுபடுவோம். பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

ஒருதலைபட்சம்!

பாலியல் வழக்கில், 'தெஹல்கா' இதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. இதுவரை இது பற்றி காங்., ஒரு வார்த்தை கூட தெரிவிக்காதது, கருத்து சுதந்திரம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து, அக்கட்சியின் ஒருதலைபட்சமான அணுகுமுறையை காட்டுகிறது. சுதான்ஷு திரிவேதி ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us