தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஒத்துப் போகிறது!

ஒத்துப் போகிறது!

ஒத்துப் போகிறது!


UPDATED : ஆக 20, 2026 10:19 PM

ADDED : ஆக 20, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 10:19 PM ADDED : ஆக 20, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜம்மு - காஷ்மீர் நம் நாட்டின் ஒரு முக்கியமான பகுதி என, நீண்ட காலமாகவே நாம் கூறி வருகிறோம். இதே கருத்தை தான் அமெரிக்க துாதர் செர்ஜியோ கோரும் கூறி உள்ளார். அவரது இந்த கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். ஜம்மு - காஷ்மீர் எப்போதும் நம் நாட்டின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். சசி தரூர் லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

அழிவு தான் மிஞ்சியுள்ளது!

வியட்நாம் முதல் ஈரான் வரை அமெரிக்கா எங்கு தலையிட்டதோ அங்கு அழிவு தான் மிஞ்சியுள்ளது. நம் நாட்டை பற்றி அந்நாடு ஒன்றும் நற்சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு பேச்சுக்கும் அந்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை. ஜம்மு - -காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தீர்வாக இருக்க முடியாது. மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

தகுதி இல்லை!

'வந்தே மாதரம்' பாடல் விவகாரத்தில், அரசியலமைப்பு நிர்ணய சபை மேற்கொண்ட முடிவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார். அவர் தன்னை அம்பேத்கர், சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்களை காட்டிலும் உயர்ந்தவராக கருதுகிறார். தேச பற்று குறித்து பேச பா.ஜ.,வுக்கு தகுதி இல்லை. பவன் கெரா ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us