தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/முக்கிய கடமை!

முக்கிய கடமை!

முக்கிய கடமை!


UPDATED : செப் 04, 2026 07:39 PM

ADDED : செப் 04, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 07:39 PM ADDED : செப் 04, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள். தங்களது வழிகாட்டுதல் மூலம் மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதே ஆசிரியர்களின் முக்கிய கடமை. நம் நாட்டை உன்னத உயரத்திற்கு கொண்டு செல்லும் அறிவொளி பெற்ற தலைமுறையினரை நம் ஆசிரியர்கள் உருவாக்குவர் என, நம்புகிறேன். திரவுபதி முர்மு ஜனாதிபதி


விட்டுக்கொடுக்க தயார்! சமூகத்திலிருந்து ஜாதி வெறி முழுமையாக ஒழிக்கப்பட்டால், இட ஒதுக்கீட்டு பலன்களை நாங்கள் விட்டுக் கொடுக்க தயார். ஜாதி வெறி என்பது அறவே ஒழிக்கப்பட வேண்டியது. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இட ஒதுக்கீடு என்பது ஒரு அரசியல் சாசன உரிமை. அதை கேள்வி யாருக்கும் உரிமை இல்லை. ராம்தாஸ் அத்வாலே மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி

உண்மையான மனநிலை! பெண்களின் எதிர் காலத்தை நசுக்குவதே காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் அவரது கட்சியின் உண்மையான மனநிலை. தெலுங்கானாவில் அமைச்சராக இருந்த சுரேகா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதே இதற்கு சாட்சி. பெண் உரிமை என, தேர்தல் ஆதாயத்துக்காக காங்., பேசுகிறது. பன்சூரி ஸ்வராஜ் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us