ADDED : செப் 10, 2026 08:21 PM
நேதாஜி வழியில் பதில்! கொல்கட்டாவில் செயல்படும் ஜாதவ்பூர் பல்கலையில் உள்ள தேசவிரோத சக்திகளின் ஆதரவாளர்களுக்கு கடுமையான மருந்துகள் தேவைப்படுகிறது. பல்கலை வளாகத்தில், ‘காஷ்மீர் சுதந்திரம் வேண்டும்’ என முழக்கம் எழுப்பப்பட்டால், காந்தி வழியில் இல்லாமல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியில் பதிலளிக்கப்படும். சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வர், பா.ஜ.,
எந்த பலனும் இல்லை! ‘பிரிக்ஸ், ஷாங்காய் உச்சி மாநாடு, குவாட்’ உள்ளிட்டவற்றின் ஒரு அங்கமாக இந்தியா விளங்குகிறது. இதற்காக எத்தனையோ பிரதமர்கள், அதிபர்கள் இந்தியா வருகின்றனர்; கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. ஆனால், இவற்றால் எந்த பலனையோ, நன்மையையோ, உறுதியான முடிவுகளையோ நாம் அடைந்ததாக தெரியவில்லை. சிதம்பரம் ராஜ்ய சபா எம்.பி., – காங்.,
அதிருப்தியில் வாழ்பவர்கள்! இந்தியாவில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டை காங்கிரஸ் எதிர்க்கிறது. நாட்டின் உலகளாவிய அந்தஸ்து உயரும் போதெல்லாம், எதிர்ப்பை பதிவு செய்வது காங்கிரசாரின் வழக்கம். எப்போதும் அதிருப்தியில் வாழ்பவர்கள். இதுபோன்ற மாநாட்டை இனி நடத்த முடியாததால், வாய்ப்பை நழுவ விட்ட வருத்தத்தில் புலம்புகின்றனர். பிரதீப் பண்டாரி செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
