UPDATED : செப் 30, 2026 10:29 PM
ADDED : செப் 30, 2026 08:12 PM
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை விளம்பரப்படுத்தவே, 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. மற்றபடி, அக்கூட்டணிக்கு கொள்கையும் இல்லை; கோட்பாடும் இல்லை. கூட்டணி கட்சிகளையே பல முறை காங்., ஏமாற்றி உள்ளது. அக்கட்சியிடம் இண்டி கூட்டணி உஷாராக இருக்க வேண்டும். ராஜிவ் சந்திரசேகர் பா.ஜ., தலைவர், கேரளா
மன்றாடும் ராகுல்!
'இண்டி' கூட்டணி சுக்குநுாறாக உடைந்துள்ளது. ராகுலின் தலைமையை ஏற்க கூட்டணிகள் மறுப்பு தெரிவித்து விட்டன. அவரது தலைமையை சொந்த கட்சியினரே ஏற்க மறுக்கின்றனர். 'என்னை தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள்' என, சொந்த கட்சியினரிடையே ராகுல் மன்றாடி வருகிறார். அவரை யாரும் கண்டுகொள்வதே இல்லை. சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஜனாதிபதியாகவே ஆக்கிவிடலாம்!
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு, 'பத்ம பூஷண்' விருது வழங்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். ஏன் அதோடு நிறுத்த வேண்டும். அவருக்கு நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா'வையே வழங்கலாம். பா.ஜ.,வுக்கு செய்த உதவிகளால், அவரை நாட்டின் ஜனாதிபதியாகவே ஆக்கி விடலாம். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
