பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 5 நாளில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்!
பயங்கரவாத தாக்குதலில் திருமணமான 5 நாளில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்!
UPDATED : ஏப் 23, 2025 11:30 AM
ADDED : ஏப் 23, 2025 08:11 AM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் ஒருவர். ஏப்ரல் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டு மனைவி உடன் சுற்றுலா வந்த இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. 26 வயதான இவருக்கு ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடந்ததுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
யார் இந்த வினய் நர்வால்
* வினய் நர்வால் கொச்சியில் இந்திய கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 26.
* இவர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் உள்ள பூஸ்லி கிராமத்தில் பிறந்தார்.
* இவரது தந்தை ராஜேஸ் நர்வால் பானிபட்டில் உள்ள ஜி.எஸ்.டி., துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.
* ஏப்ரல் 19ம் தேதி கர்னல் மாவட்டத்தில் நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் கடைசியாக தம்பதியினருடன் நேரத்தை செலவிட்டனர்.
* திருமணத்திற்குப் பிந்தைய விடுமுறைக்காக நர்வாலும் அவரது மனைவியும் பஹல்காம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பிற பகுதிகளுக்குப் புறப்பட்டனர்.
* திருமணம் செய்து கொண்டு மனைவி உடன் சுற்றுலா வந்த இடத்தில் , நர்வால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
* நர்வாலின் மார்பு, கழுத்து மற்றும் இடது கையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். நர்வாலுக்கு ஒரு தங்கை உள்ளார்.
* இந்திய கடற்படை அதிகாரி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் விடுப்பில் இருந்தபோது கொல்லப்பட்டதை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கர்னல் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், அந்த அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.