ADDED : ஜன 31, 2024 12:49 AM

ராய்ப்பூர்,சத்தீஸ்கரில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள ஏழு மாவட்டங்களில் நக்சல் ஒழிப்புப் படையினருடன், மாவட்ட ரிசர்வ் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் அமைந்துள்ள தெஹல்குடேம் பகுதியில் நக்சல் ஒழிப்புப் படையினருடன் மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில், மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்; 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஹெலிகாப்டர் வாயிலாக மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தை அந்த அங்கு கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.