30 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை
30 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை
UPDATED : செப் 20, 2026 08:01 PM
ADDED : செப் 20, 2026 06:33 PM

வாரணாசி: உத்தர பிரதேசத்தில், நக்சல் அமைப்பின் முக்கிய தளபதி பிரிஜேஷ் கஞ்சுவை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
ஜார்க்கண்டைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான, 'திரிதிய பிராஸ்துதி' குழுவின் தளபதி பிரிஜேஷ் கஞ்சு. இவர் மீது, கொலை வழக்கு உட்பட, 50 வழக்குகள் உள்ளன. இவரை பற்றி தகவல் கொடுத்தால், 30 லட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக விசாரணை அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், உ.பி.,யின் வாரணாசியில் பிரிஜேஷ் கஞ்சு சுற்றித்திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தெகரா பகுதியில் இருந்து முகல்சராய் நோக்கி, தன் கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்ற கஞ்சுவை, ராம்நகர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர் தப்ப முயன்றார்.
பதிலுக்கு போலீசார் சுட்டதில் கஞ்சு உயிரிழந்தார். தப்பியோடிய அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
