ADDED : மே 27, 2025 12:28 AM
ராஞ்சி, ஜார்க்கண்டில் லத்தேஹர் மாவட்டத்தின் தவுனா வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் இணைந்து, போலீசார் அப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
பதுங்கி இருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்; மற்றொரு நக்சல் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடினர்.
இந்த தாக்குதலில், தலைக்கு, 5 லட்சம் ரூபாய் அறிவித்து, தேடப்பட்டு வந்த நக்சல் மணீஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதேபோல், 10 லட்சம் ரூபாய் அறிவித்து தேடப்பட்ட நக்சல் குந்தன் என்பவரை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.