ADDED : அக் 17, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்: ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார்.
ஹரியானா மாநிலத்திற்கு கடந்த அக்.,5 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க., 48 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை ஆட்சியை தக்கவைத்தது.
இதையடுத்து ஹரியானா முதல்வராக நயாப் சைனி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.