தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி பள்ளிப்பாடம்; 9ம் வகுப்பு சமூக அறிவியலில் சேர்ப்பு

வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி பள்ளிப்பாடம்; 9ம் வகுப்பு சமூக அறிவியலில் சேர்ப்பு

வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி பள்ளிப்பாடம்; 9ம் வகுப்பு சமூக அறிவியலில் சேர்ப்பு

2


ADDED : ஜூன் 26, 2026 01:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:19 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வாக்காளர் பட்டியல்களுக்கு சிறப்புத் தீவிர மறுஆய்வு செய்யுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு ஓராண்டுக்குப் பிறகு, என்.சி.இ.ஆர்.டி., தனது 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எஸ்ஐஆர் குறித்த ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 1975ல் அப்போதைய பிரதமர் இந்திரா நாடு முழுவதும் அமல் செய்த நெருக்கடி நிலை தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது. தேசிய கல்வி கொள்கை, 2020ன் கீழ் பள்ளி கல்வியில் மேற்கொள்ளப்படும் முக்கிய மாற்றங்களின் ஒரு பகுதியாகவும், சமகால வரலாறு குறித்து மாணவர்கள் இடையே புரிதலை வலுப்படுத்தவும் இந்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

தற்போது வாக்காளர் பட்டியல்களுக்கு சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்தும் என்.சி.இ.ஆர்.டி., தனது 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எஸ்ஐஆர் குறித்த ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது. முதல் முறையாக, இந்தப் புத்தகத்தில் எஸ்ஐஆர் குறித்து ஒரு தனி அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்தல், அதைச் சரிபார்த்தல் மற்றும் பிழைகளைத் திருத்துதல் ஆகியவையே இதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையானது தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்களிக்கும் உரிமையை இழக்காமலும், தகுதியற்ற எவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமலும் இருப்பதை உறுதி செய்கிறது.

எஸ்ஐஆர் பணியின் போது, ​​18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன. காலமானவர்கள், முகவரிகளை மாற்றியவர்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன என்றும், வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் பாடம் இடம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us