sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஆன்லைன்' பக்க வடிவு புத்தகங்கள் வெளியிட்டது என்.சி.இ.ஆர்.டி.,

/

'ஆன்லைன்' பக்க வடிவு புத்தகங்கள் வெளியிட்டது என்.சி.இ.ஆர்.டி.,

'ஆன்லைன்' பக்க வடிவு புத்தகங்கள் வெளியிட்டது என்.சி.இ.ஆர்.டி.,

'ஆன்லைன்' பக்க வடிவு புத்தகங்கள் வெளியிட்டது என்.சி.இ.ஆர்.டி.,


UPDATED : ஜூலை 25, 2025 03:56 PM

ADDED : ஜூலை 25, 2025 01:12 AM

Google News

UPDATED : ஜூலை 25, 2025 03:56 PM ADDED : ஜூலை 25, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்காத நிலையில், அவற்றின் 'ஆன்லைன்' கோப்புகள், தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யாராலும் மாற்ற முடியாத, பி.டி.எப்., வடிவில் அவை உள்ளன.

புதிய கல்வி கொள்கையின்படி, இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கான ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் இதுவரை புத்தகங்கள் விற்பனைக்கு வராததால், 'பிரிட்ஜ் கோர்ஸ்' எனும் இணைப்பு பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், கடைகளில் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள் அவதியடைவது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, என்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தின், https://ncert.nic.in/textbook.php என்ற இணைப்பு பக்கத்தில், புத்தகங்களின் பி.டி.எப்., கோப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இவற்றை, ஆசிரியர்களும், மாணவர்களும் இலவசமாக பதிவிறக்கி அச்சிட்டுக் கொள்ளலாம். இவற்றை, வணிக ரீதியில் அச்சிட முடியாதபடி, 'வாட்டர் மார்க்' எனும் மங்கலான எழுத்துருவில், 'என்.சி.இ.ஆர்.டி., டெக்ஸ்ட் புக்' என, ஒவ்வொரு பக்கத்திலும் சாய்வாக பொறிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், பல பள்ளிகளில், அங்கீகரிக்கப்படாத முகவர்கள் வாயிலாக புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. அதேநேரம், அமேசான் இணையதளத்தின் வாயிலாக புத்தகங்களை வாங்கலாம் என்றும் என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

4.7 லட்சம் புத்தகங்கள் பறிமுதல்

நவீன அச்சிடும் இயந்திரங்களின் வாயிலாக உயர் தரமான புத்தகங்களை தயாரித்து, மலிவு விலையில் விற்பனை செய்யும் பணியில் மத்திய கல்வி அமைச்சகம் மும்முரமாக செயல்படுகிறது. கான்பூர் ஐ.ஐ.டி., சார்பில், திருட்டு தடுப்பு தொழில்நுட்பம், புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதையும் மீறி, திருட்டுத்தனமாக அச்சிடப்பட்ட, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.7 லட்சம் போலி புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., பறிமுதல் செய்துள்ளது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us