என்.சி.ஆர்.டி.சி.,க்கு நிலம் தர துணைநிலை கவர்னர் ஒப்புதல்
என்.சி.ஆர்.டி.சி.,க்கு நிலம் தர துணைநிலை கவர்னர் ஒப்புதல்
ADDED : மே 20, 2025 06:35 AM

புதுடில்லி: சாராய் காலே கானில் உள்ள டில்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்தின் 2.5 ஏக்கர் நிலத்தை, தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்க துணைநிலை கவர்னர் சக்சேனா, தடையில்லா சான்றிதழ் வழங்கினார்.
தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்தின், டில்லி - -காஜியாபாத் - -மீரட் நமோ பாரத் ரயில் வழித்தடத்தில் சாராய் காலே கான் நிலையம் மிக முக்கியமான நிலையமாக அமைந்துள்ளது.
ஐ.எஸ்.பி.டி., பஸ் நிலையம், டில்லி மெட்ரோ, ரயில்வே மற்றும் ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில், சாராய் காலே கானில் பிரமாண்ட ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணியர் வந்து செல்வர். எனவே, சாராய காலே கானில், என்.சி.ஆர்.டி.சி., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகம் பிரமாண்ட ரயில் நிலையம் கட்ட கூடுதல் இடம் கோரியது.
இங்கு, டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்துக்குச் சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை வாங்கியது.
இதற்கான தடையில்லாச் சான்றிதழ் கேட்டு அனுப்பிய விண்ணப்பத்துக்கு துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.