உள்ளடக்கத்திற்கு செல்ல

இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் அளிக்குமாறு கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. பாதியை மறைத்து மீதியை மட்டும் வெளியிட்டதற்கும் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதனால் ஹேமா அறிக்கையில் மறைக்கப்பட்ட மற்ற விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த உத்தரவால் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது.
பாதியை மறைத்து மீதியை வெளியிட்டது ஏன்: தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு கிடுக்கிப்பிடி!
பாதியை மறைத்து மீதியை வெளியிட்டது ஏன்: தேசிய மகளிர் ஆணையம் கேரளாவுக்கு கிடுக்கிப்பிடி!
UPDATED : செப் 01, 2024 08:40 AM
ADDED : செப் 01, 2024 08:25 AM

அ நிறம் | அளவு
திருவனந்தபுரம்; ஹேமா கமிஷன் அறிக்கையின் வெளியிடப்படாத முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் அளிக்குமாறு கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திரையுலகில் புயல்
நடிகர்கள் மீது புகார்
அறிக்கையும், அதையொட்டி கிளம்பிய ஆவேசமும் அளித்த தைரியம் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் முன்வந்து புகார் அளிக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு திரையுலகிலும், வெளியிலும் ஆதரவுக்குரல்கள் அதிகரித்துள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆளான மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நடிகர் முகேஷ், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியே கூறும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது.
முழு வடிவம் வேண்டும்
இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் அளிக்குமாறு கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. பாதியை மறைத்து மீதியை மட்டும் வெளியிட்டதற்கும் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நெருக்கடி