தே.ஜ., கூட்டணி 400 இடம் பெறும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
தே.ஜ., கூட்டணி 400 இடம் பெறும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
ADDED : பிப் 13, 2025 06:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அடுத்து வரும் பொது தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணி 400 இடங்களை பெறும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
ராஜ்யசபாவில் 2025-26 பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பங்கேற்ற அத்வாலே பேசியதாவது:
இது சமூக நீதியை மட்டுமல்ல, பொருளாதார நீதியையும் வழங்கும் பட்ஜெட். இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இடங்கள் குறைந்துவிட்டன. ஆனால் அடுத்த முறை நாங்கள் 400 இடங்களை எட்டுவோம். எதிர்கட்சிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும்.
அதே நேரத்தில் எங்களுடைய இடங்கள் அதிகரிக்கும். நாட்டை முன்னேற்றத்தின் திசையில் கொண்டு செல்வோம். இது சமூக நீதியை வழங்கும் பட்ஜெட், எனவே நான் அதை ஆதரிக்கிறேன்,' என்றார்.

