ஒரு மழை தந்த 'பட்டினி'! ஆந்திராவில் ஹெலிகாப்டர்களில் வரும் உணவு
ஒரு மழை தந்த 'பட்டினி'! ஆந்திராவில் ஹெலிகாப்டர்களில் வரும் உணவு
ADDED : செப் 03, 2024 11:08 AM

ஹைதராபாத்: ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை, மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
50 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பை ஏற்படுத்திய மழை, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 4 லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க, கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
எங்கும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கும் பகுதிகளில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு, முடுக்கிவிட்டார். இந் நிலையில் கடற்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று உணவை விநியோகித்து வருகின்றனர்.
பல பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் வந்து செல்வதை பார்க்கும் மக்கள் உணவுக்காக காத்திருக்கும் காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மீட்புப்புணிகளை விரைவுப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.