தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஓடிடி தளங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம்; மோகன் பாகவத் வலியுறுத்தல்

ஓடிடி தளங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம்; மோகன் பாகவத் வலியுறுத்தல்

ஓடிடி தளங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம்; மோகன் பாகவத் வலியுறுத்தல்

6


ADDED : அக் 20, 2026 11:14 AM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : அக் 20, 2026 11:14 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; இந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பதே நமது பாரம்பரியப் பண்பாகும். கடந்த ஓராண்டாக, நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்வுகளின் நிறைவாக, விஜயதசமியைக் கொண்டாடுவதற்காக நாம் இன்று இங்கே கூடியுள்ளோம். உலக அளவில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகி வருகிறது.

வரும் தலைமுறையினர் வளர்ந்த பாரதத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். பாரத மாதாவே அனைத்திலும் முதன்மை; அதிகாரப்போட்டி அழிவை ஏற்படுத்தும். மேற்கத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரான்ஸ், அல்பேனியா, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஆட்சியைக் மாற்றினால் நிலைமை மாறிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி நடக்காது. அதிகாரம்கொண்ட ஹிந்து சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று பேசுவது, நாட்டின் ஒற்றுமைக்கோ எந்த வகையிலும் முரணானது அல்ல.

இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றே; இந்தியா நமக்கு எதைக் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, நம்மிடம் உள்ள அனைத்தும் இந்தியாவுக்கே உரியவை. ஓடிடி தளங்களில் வெளியாகும் கண்டன்ட்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்; இளைஞர்கள் அதனை அப்படியே நம்பி பார்க்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட பணிகள், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us