'நீட்' தேர்வு மோசடி வழக்கு: குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை
'நீட்' தேர்வு மோசடி வழக்கு: குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை
ADDED : ஜூன் 29, 2024 03:17 PM

ஆமதாபாத்: 'நீட்' தேர்வு மோசடி வழக்கு தொடர்பாக, குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நீட் தேர்வில் நடந்துள்ள மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள், தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பீஹாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜராத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடைசி நேரத்தில், முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூன் 29) 'நீட்' தேர்வு மோசடி வழக்கு தொடர்பாக, குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆமதாபாத், கெடா மற்றும் கோத்ரா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. கோத்ராவில் பலருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.