நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை
நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை
ADDED : ஜூலை 02, 2024 01:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ‛‛ நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.
மே 5 ல் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடு உள்ளிட்ட நாடு முழுவதும் பல புகார்கள் எழுந்தன. இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வரும் 8 ம் தேதி முதல் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.