தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மே 5ல் நீட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

மே 5ல் நீட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

மே 5ல் நீட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : மே 02, 2024 03:10 PM

ADDED : மே 02, 2024 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2024 03:10 PM ADDED : மே 02, 2024 11:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது. 14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம் 24 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. https://exams.nta.ac.in/NEET என்ற வெப்சைட்டில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பெறலாம்.

ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us