‛நீட்' வினாத்தாள் வெளியான விவகாரம்: முக்கிய நபரை கைது செய்தது சி.பி.ஐ.,
‛நீட்' வினாத்தாள் வெளியான விவகாரம்: முக்கிய நபரை கைது செய்தது சி.பி.ஐ.,
ADDED : ஜூலை 03, 2024 09:53 PM

பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளியை சி.பி.ஐ., கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான ‛‛நீட் '' தேர்வு கடந்த மே.05-ம் தேதி நடந்தது. இதில் பீஹார், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது.
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுதும் பேசப்பட்ட நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீஹார் தலைநகர் பாட்னாவில் மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் என இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் முக்கிய குற்றவாளியான ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் அமான் சிங் என்பவரை சி.பி.ஐ., கைது செய்தது. இவர்தான் வினாத்தாள் கசிவு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.