நீட் வினாத்தாள் கசிவு: இரண்டு பேரை கைது செய்தது சி.பி.ஐ.,
நீட் வினாத்தாள் கசிவு: இரண்டு பேரை கைது செய்தது சி.பி.ஐ.,
ADDED : ஜூன் 27, 2024 03:21 PM

பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
மே 5 ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பீஹாரில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. முறைகேடு தொடர்பான இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீஹார் தலைநகர் பாட்னாவில் இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை துவக்கிய பிறகு முதலில் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் இவர்கள் முதல்முறையாக சிக்கி உள்ளனர்.