'நேரு பிரதமரானது தற்செயல் விபத்து': மத்திய அமைச்சரின் கருத்துக்கு காங்., கண்டனம்
'நேரு பிரதமரானது தற்செயல் விபத்து': மத்திய அமைச்சரின் கருத்துக்கு காங்., கண்டனம்
UPDATED : ஜன 13, 2025 11:48 AM
ADDED : ஜன 13, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ''நாட்டின் முதல் பிரதமர் பதவி நேருவுக்கு கிடைத்ததே ஒரு விபத்து தான்,'' என, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.,வை சேர்ந்த மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஹரியானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''சர்தார் வல்லபபாய் படேல் அல்லது அம்பேத்கர் தான் நாட்டின் முதல் பிரதமராக பதவி ஏற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு தான் அந்த தகுதி இருந்தது. நேரு பிரதமர் ஆனதே விபத்து தான்,'' என்றார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்.,கை சேர்ந்த ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, ''தற்செயலாக அமைச்சர் ஆனவரெல்லாம் இந்த விமர்சனத்தை முன்வைக்க கூடாது,'' என்றார்.