ADDED : ஜன 09, 2025 06:50 AM

பெங்களூரு: பெங்களூரின் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில், நாளை இரவு நவீன சாதனங்கள் வழியாக, ஆகாயத்தின் நிகழ்வுகளை பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, கர்நாடக செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஆகாயத்தின் நிகழ்வுகளை பார்க்க, வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டெலஸ்கோப், பைனாகுலர் வாயிலாக பல ஆச்சர்யமான விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
நாளை இரவு 10:00 மணி முதல், அதிகாலை 4:30 மணி வரை ஆகாயங்களின் நிகழ்வுகளை காண, ஒருவருக்கு தலா 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 13 மற்றும் அதற்கு அதிக வயது உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.
ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விபரங்களை, info@taralaya.org என்ற வலைதளத்துக்கு தெரிவித்து, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரே குடும்பத்தினராக இருந்தாலும், ஒவ்வொருவரின் தகவலும் இருக்க வேண்டும். கூடுதல் தகவல் வேண்டுவோர், 080 - 2237 9725, 2225 6084 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.