ADDED : ஆக 14, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த, நான்கு குழந்தைகளின் தாயான, 32 வயது பெண் சமீபத்தில் கணவரை பிரிந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தார். சில நாட்களுக்கு முன், ரயிலில் டில்லி வந்தார் .
பயணத்தில், சக பயணியிடம் வேலை குறித்து பேசிய போது, மன்ஜீத் என்பவரின் தொடர்பு எண்ணை கொடுத்தார். டில்லியில் அவரை தொடர்பு கொண்டபோது, வேலை வாங்கி தந்து, விடுதியில் தங்கவும் ஏற்பாடு செய்தார்.
கடந்த, 10ம் தேதி, மது போதையில் விடுதிக்கு வந்த மன்ஜீத், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, பெண்ணின் புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், மன்ஜீத்தை தேடுகின்றனர்.

