UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 11:44 PM
புதுடில்லி: ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனத்தின் குறைந்த கொழுப்பு உள்ள, ‘வொயிட்னர்’ எனப்படும், பால் பொருட்களின் திடத்தை அதிகரிக்க பயன்படும் பவுடர் விற்பனைக்கு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உடனடி தடை விதித்துள்ளது.
டில்லி கன்னாட் பிளேசில் உள்ள, ‘ஹோட்டல் லலித்’ வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, ‘நெஸ்லே’ இந்தியா நிறுவனத்தின் குறைந்த கொழுப்பு உள்ள, ‘வொயிட்னர்’ பவுடரின் மாதிரியை சேகரித்து, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர்.
சோதனையின் முடிவில், இந்த பவுடர் பாதுகாப்பற்றது மற்றும் தரமற்றது என அறிவித்ததுடன், அதன் விற்பனையை உடனே நிறுத்தும்படி அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இது, 2006ம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
