sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய சவால்கள்!

/

புதிய சவால்கள்!

புதிய சவால்கள்!

புதிய சவால்கள்!


ADDED : ஜன 27, 2026 01:05 AM

Google News

ADDED : ஜன 27, 2026 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியலமைப்பின் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி தத்துவங்களை சிதைக்கும் முயற்சிகள் அரங்கேறுகின்றன. முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், அவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்பது அவசியம். பிளவுபடுத்தும் அரசியலை அன்பும் சகோதரத்துவமும் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

- பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

ஒரே தீர்வு!


மாவோயிச சித்தாந்தம், நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு கடுமையான சவால். புற்றுநோய் போன்ற இந்த அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வரும் கடினமான பணியை மார்சுக்குள் முடிப்போம். மாவோயிஸ்டுகளின் சித்தாந்தத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிப்பதே ஒரே தீர்வு.

- விஷ்ணு தியோ சாய், சத்தீஸ்கர் முதல்வர், பா.ஜ.,

மக்களின் முடிவு!


ஓட்டு வங்கி அரசியல் வேண்டுமா அல்லது வளர்ச்சி பயணம் தொடர வேண்டுமா என்பதை, வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினரின் உரிமைகளையும் கலாசாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்க என் அரசு உறுதிபூண்டு உள்ளது.

- ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,






      Dinamalar
      Follow us