sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர். 5ல் பதவி ஏற்பு

/

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர். 5ல் பதவி ஏற்பு

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர். 5ல் பதவி ஏற்பு

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வர். 5ல் பதவி ஏற்பு


ADDED : நவ 30, 2024 11:37 PM

Google News

ADDED : நவ 30, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை, டிச. 1- மஹாராஷ்டிரா மாநிலத்தில், புதிய அரசு, 5ம் தேதி பதவியேற்க உள்ளது. அதே நேரத்தில், பா.ஜ., மற்றும் சிவசேனா இடையே சமரசம் ஏற்படாததால், யார் முதல்வராவார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, கடந்த மாதம், 20ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், மொத்தமுள்ள, 288 தொகுதிகளில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 230 இடங்களில் வென்றது. பா.ஜ., 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. கூட்டணியில் உள்ள சிவசேனா, 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ், 41 இடங்களிலும் வென்றன.

இழுபறி


வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் வெற்றியை, மஹாயுதி கூட்டணி பெற்றது. ஆனாலும், முதல்வர் பதவி தொடர்பாக முடிவு எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி, புதிய அரசு அமைவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 2014 மற்றும், 2-019 சட்டசபை தேர்தல்களின் போதும், இதுபோன்றே, முதல்வர் பதவிக்கான மோதல் ஏற்பட்டது. கடந்த, 2014ல் தொகுதி பங்கீடு தொடர்பாகவும், முதல்வர் பதவி தொடர்பாகவும், பா.ஜ., மற்றும் சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, 25 ஆண்டு கூட்டணி முறிந்தது. ஆனால், மீண்டும் இணைந்து கொண்டனர். பின், 2019 தேர்தலில், பா.ஜ., மற்றும் சிவசேனா கூட்டணி வென்றது. ஆனால், முதல்வர் பதவி கேட்டு, உத்தவ் தாக்கரே முரண்டு பிடித்ததால் கூட்டணி முறிந்தது.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல்வரானார். ஆனால், 2022ல் அவருடைய சிவசேனா கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வரானார். அதன்பின், அஜித் பவாரும் கூட்டணி அரசில் இணைந்தார்.

தற்போதைய தேர்தலில், இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆளும் கூட்டணியில், தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், பா.ஜ., முதல்வர் பதவிக்கு உரிமை கேட்டு வருகிறது.

அதே நேரத்தில், அதை விட்டுக் கொடுக்க சிவசேனாவின் தலைவரும், தற்போது காபந்து முதல்வராகவும் உள்ள ஏக்நாத் ஷிண்டே தயாராக இல்லை. பா.ஜ.,வின் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மீண்டும் முதல்வராவதற்கு, மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்., தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

கவுரவ குறைச்சல்


கடந்த, 2022ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, 2014 - 2019ல் முதல்வராக இருந்த தேவேந்திர பட்னவிஸ், கட்சியின் உத்தரவை ஏற்று, துணை முதல்வரானார்.

அதேபோன்று, தற்போது, ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்க முன்வர வேண்டும் என்று, பா.ஜ., தலைமை வலியுறுத்திஉள்ளது.

பல நாட்கள் இழுபறிக்கு பின், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முடிவை ஏற்பதாக, ஏக்நாத் ஷிண்டே காய் நகர்த்தினார்.

கூட்டணி தர்மம், மராத்தா மக்களின் ஆதரவு என, பல விஷயங்களை பா.ஜ., தலைமை ஆராய்ந்தது. தற்போது மத்தியிலும், கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடனே, பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

பீஹாரில் அதிக இடங்களில் வென்ற போதும், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை பா.ஜ., விட்டுக் கொடுத்தது. அதேபோன்று, தங்களுக்கும் முதல்வர் பதவியை தர வேண்டும் என்பதில், சிவசேனா விடாப்பிடியாக உள்ளது.

துணை முதல்வர் பதவியை தருவதற்கு பா.ஜ., முன் வந்தும், அது கவுரவ குறைச்சல் என்று, சிவசேனா கூறியுள்ளது. துணை முதல்வர் பதவி தான் என்றால், புதிய அரசில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஷிண்டே கூறியுள்ளதாக தெரிகிறது.

தன் கட்சியை சேர்ந்த வேறு யாருக்காவது அல்லது தற்போது எம்.பி.,யாக உள்ள தன் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கும்படி, பா.ஜ., தலைமையிடம் ஷிண்டே கூறியுள்ளதாக தெரிகிறது.

செல்வாக்கு


மராத்தா சமூகத்தினர் இடையே ஏக்நாத் ஷிண்டேவுக்கு செல்வாக்கு உள்ளது. அது, பா.ஜ., அரசுக்கு மிகவும் முக்கியம். அதுபோல, எந்த ஒரு சர்ச்சையிலும் அவர் சிக்காததையும், பா.ஜ., கவனத்தில் கொண்டுள்ளது.

அமைச்சரவையில் ஷிண்டே இடம் பெறாவிட்டால், மற்றொரு மராத்தா தலைவரான அஜித் பவார் பெரும் முக்கியத்துவம் பெறுவார். ஆட்சியிலும், அதிகாரத்திலும் அவருடைய கை ஓங்கிவிடும்.

அதையும் தடுக்க வேண்டும். இதனால், ஏக்நாத் ஷிண்டே இல்லாமல் புதிய அரசு அமைப்பதற்கு பா.ஜ., தலைமை தயாராக இல்லை.

இந்நிலையில், மஹாயுதி கூட்டணி கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில், பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என, பா.ஜ., நம்புகிறது. அதைத் தொடர்ந்து நாளை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும், வரும், 5ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்குள், முதல்வர் யார் என்பதில் உறுதியான முடிவு எட்டப்பட்டு விடும் என்றும், பா.ஜ., தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரே பிரிவு கேள்வி!

சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவன்று, தேர்தல் கமிஷன் மாலை அறிவித்த ஓட்டு சதவீதத்தை விட, இரவு வெளியிட்ட தகவலில், 76 லட்சம் ஓட்டுகள் அதிகமுள்ளன. இதுபோலவே, சமீபத்தில் ஹரியானா சட்டசபை தேர்தலிலும், 14 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக விழுந்தன.இதுவே, மஹாயுதி கூட்டணியின் வெற்றிக்கு காரணமாகியுள்ளது. இந்த இயற்கைக்கு மாறான வெற்றியை, அந்தக் கூட்டணியில் உள்ளவர்களே ஏற்கவில்லை. அதனால் தான், முதல்வர் பதவிக்கு போட்டி நடக்கிறது. முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.இங்கு என்ன தான் நடக்கிறது. இவர்களுடைய மோதல்களால், எட்டு நாட்களாக முதல்வர் இல்லாத நிலை உருவாகிஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us