ADDED : டிச 13, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்ரம்நகர்:டில்லி அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு தினை, வேர்க்கடலை உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் கிடைக்க உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை புதிய உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. டில்லியில் உள்ள அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் இந்த குளிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு வகைகளை சாப்பிட உள்ளனர்.
தினையில் இருந்து தயாரிக்கப்பட்டது உட்பட ஆறு புதிய உணவு வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, கேழ்வரகு பெசன் லட்டு, வேர்க்கடலை சாட், லோபியா சாட், வேர்க்கடலை போஹா, தட்டையான அரிசி தின்பண்டங்கள் உள்ளிட்டவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.