தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ விமானத்தில் இருக்கை தேர்வுக்கு இனி கூடுதல் கட்டணம் இல்லை புதிய வழிகாட்டுதல் வெளியானது

 விமானத்தில் இருக்கை தேர்வுக்கு இனி கூடுதல் கட்டணம் இல்லை புதிய வழிகாட்டுதல் வெளியானது

 விமானத்தில் இருக்கை தேர்வுக்கு இனி கூடுதல் கட்டணம் இல்லை புதிய வழிகாட்டுதல் வெளியானது


ADDED : மார் 19, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-:

'விமான டிக்கெட் முன்பதிவின் போது, 60 சதவீத இருக்கைகளின் தேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது' என, நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விமான டிக்கெட் முன்பதிவின் போது ஜன்னல் அருகில் உள்ள இருக்கைகள், கால் வைப்பதற்கு கூடுதல் இடம் உள்ள இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. மிகக் குறைந்த இருக்கைகள் மட்டுமே கூடுதல் கட்டணமின்றி கிடைக்கின்றன.

இந்நிலையில், விமான பயணியரின் வசதி மற்றும் விமான சேவை ஒழுங்கு முறைகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

நாட்டில் உள்ள விமான நிலையங்கள் தினசரி 5 லட்சத்துக்கும் அதிகமான பயணியர்களை கையாள்கிறது. பயணியருக்கு வசதியான ஏற்பாடுகளை செய்து தர வேண்டியது விமான நிறுவனங்களின் கடமை.

ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீத இருக்கைகள் ஒதுக்கீட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஒரே பி.என்.ஆர்., எண் உடன் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியருக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்க வேண்டும்.

செல்லப்பிராணிகள் கொண்டு செல்ல தெளிவான கொள்கை வெளியிட வேண்டும். விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் எடுத்துச் செல்ல எளிதான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பயணியரின் உரிமைகள் பற்றிய தகவல் பிராந்திய மொழிகளிலும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us