ADDED : ஜூலை 01, 2026 11:54 PM

'டிஜிட்டல் இந்தியா' திட்டம் உலகஅளவில் இந்தியாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்துள்ளது. இத்திட்டம், நிர்வாகத்தை மறுவரையறை செய்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளது. விரிவ டைந்து வரும் இத்திட்டம், மக்களின் எளிதான வாழ்க்கை முறைக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறி உள்ளது.
நரேந்திர மோடி பிரதமர்
நீண்ட காலம் எடுக்காது!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் செயல்பாடுகளை பார்த்தால், ஆளும் காங்கிரசை வீழ்த்த பா.ஜ.,வுக்கு நீண்ட காலம் எடுக்காது. அவர் பா.ஜ.,வை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்து மதிப்பிடலாம். ஆனால், அவரை விட பெரிய தலைவர்களையும், பலம் வாய்ந்த அரசுகளையும் பா.ஜ., வீழ்த்தி உள்ளது.
பண்டி சஞ்சய் குமார் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஊதியம் போதுமானதல்ல!
'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' சட்டத்தின் கீழ், 125 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தினசரி ஊதியம் நியாயமற்றது. பெரும்பாலான மாநிலங்களில், தினசரி ஊதியம், 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது போதுமானதல்ல. எனவே, ஊதியத்தை மத்திய பா.ஜ., அரசு உடனடியாக உயர்த்த வேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
