UPDATED : அக் 01, 2026 01:43 PM
ADDED : அக் 01, 2026 10:20 AM
புதுடில்லி: இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை, உலகளாவிய பிராண்டுகளாக உருவாக்கும் வகையில் ‘விக்சித் டெக் 47’ என்ற புதிய தளத்தை இந்தியா மொபைல் காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளதாக இம்மாநாட்டின் தலைமை செயல் அதிகாரி ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
டில்லியில், வரும் அக்., 7 முதல் 10ம் தேதி வரை, தொலைத்தொடர்பு துறை, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் இணைந்து, இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டை நடத்துகின்றன. இதில் 1.50 லட்சம் பங்கேற்பார்கள், 300 நிறுவனங்கள், 100 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
மாநாட்டின் ஒரு பகுதியாக ‘விக்சித் டெக் 47’ என்ற தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விக்சித் டெக் 47 தளத்தில் நுகர்வோர் சாதனங்கள், ஆடியோ சாதனங்கள், வீடியோ கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், ‘ஸ்மார்ட் ஹோம் ’ மற்றும் ‘ஐ.ஓ.டி., உதிரிபாகங்கள்’ உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் சேவைகள், ‘டீப் டெக் ’ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகள் இடம்பெறும்.
இந்த மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பீடுகள் மற்றும் நிறுவனர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், அறிக்கை ஒன்று வெளியிடப்படும். இதில், உலக தொழில்நுட்ப மதிப்பு தொடரில் இந்தியாவின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
