சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வலுவான வருவாய் வளர்ச்சியை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த வருவாய் இழப்பும் அனுமதிக்கப்படாது. அரசாங்கம் வெளிப்படையான மற்றும் பயனுள்ள கலால் கொள்கைக்கு உறுதிபூண்டுள்ளது.
ரேகா குப்தா,
முதல்வர்
சுத்தமான டில்லி!
டில்லி குடிநீர் வாரியத்தால் உருவாக்கப்பட்ட 564 எம்.எல்.டி., சுத்திகரிப்பு திறன் கொண்ட ஓக்லாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இப்போது முழுமையாக செயல்பட்டு வருகிறது. யமுனையை சுத்தமாக்கவும், நகரத்தின் வடிகால்வாய்களை கழிவுநீரிலிருந்து விடுவிக்கவும் அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். டில்லியை சுத்தமான தலைநகராக மாற்றுவதே எங்கள் நோக்கம்.
பர்வேஷ் சாஹிப் சிங்,
நீர்வள அமைச்சர்

