மைசூரு - பெங்களூரு சாலை சுங்க வரிக்கு புதிய நடைமுறை
மைசூரு - பெங்களூரு சாலை சுங்க வரிக்கு புதிய நடைமுறை
ADDED : டிச 09, 2024 06:46 AM

மைசூரு: ''மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் பயணியர், எவ்வளவு துாரம் பயணிக்கின்றனரோ, அந்த துாரத்துக்கு மட்டுமே சுங்க வரி செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும்,'' என மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.
இது குறித்து, மைசூரில் அவர் அளித்த பேட்டி:
மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில், சுங்கவரியாக முழு தொகையும் வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் எவ்வளவு துாரம் பயணம் செய்கிறோமோ, அவ்வளவு துாரம் மட்டும் சுங்க வரி செலுத்தினால், போதும். இதற்காக ஆங்காங்கே டோல் பூத்கள் அமைக்கப்படும்.
இப்புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் வேண்டுகோள் விடுத்தோம். இதை அவர் ஏற்றுக்கொண்டார். விரைவில் புதிய நடைமுறை அமலுக்கு வரும்.
மாண்டியாவுக்கு செல்லும் வழித்தடத்தின், இரண்டு இடங்களில் சுரங்கப்பாதை கட்டப்படும். இந்த நெடுஞ்சாலையில் 711 கோடி ரூபாய் செலவில், பல்வேறு பணிகள் நடக்கவுள்ளன.
பண்டிப்பூரில் இரவு நேரத்தில், வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். தடையை நீக்க முடியாது என, முதல்வர் சித்தராமையா கூறியும், சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
முடா முறைகேடுகள் குறித்து, லோக்சபாவில் விவாதிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்துவோம். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு பற்றியும் விவாதிப்போம்.
பல்லாரியில் குழந்தை பிறந்த பெண்களின் நலனில் அக்கறை காட்டாததை கண்டித்து எங்கள் போராட்டம் தீவிரமடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.