ADDED : மார் 11, 2024 07:26 AM

பா.ஜ.,வின் சுதாகர், காங்கிரசின் ரக் ஷா ராமையா சிக்கபல்லாப்பூர் தொகுதி எம்.பி., ஆக வேண்டும் என்று வாழைப் பழத்தில் எழுதி தேர் மீது, ஆதரவாளர்கள் வீசி உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதியில் பா.ஜ., - காங்கிரசில் கடும் போட்டி எழுந்து உள்ளது. இரு கட்சியிலும் பலர் 'சீட்' கேட்கின்றனர். யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்று தெரியாமல் இரு கட்சிகளின் தலைவர்களும் முழித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவராத்திரியை ஒட்டி சிக்கபல்லாப்பூர் போக நந்தீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. 'மனதில் நினைப்பதை வாழை பழத்தில் எழுதி, தேர் மீது வீசினால் நினைத்தது நடக்கும்' என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் தேரோட்டத்தின் போது, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகர் எம்.பி., ஆக வேண்டும் என்றும்; காங்கிரசின் ரக் ஷா ராமையா எம்.பி., ஆக வேண்டும் என்றும் அவரவர் ஆதரவாளர்கள், வாழை பழங்களில் எழுதி தேர் மீது வீசினர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படங்ளை பார்க்கும் நெட்டிசன்கள், 'போக நந்தீஸ்வரர் யாருடைய வேண்டுதலை நிறைவேற்ற போகிறாரோ' என்று கருத்து பதிவிட்டு உள்ளனர்.

