தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிகள்: மே 1 முதல் அமல்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிகள்: மே 1 முதல் அமல்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிகள்: மே 1 முதல் அமல்


ADDED : ஏப் 23, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ' ஆன்லைன்' விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறை விதிகளை வெளியிட்டுள்ளது. இது மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: 'ஆன்லைன்' விளையாட்டுகளைக் கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் பிரத்யேகமான, 'ஆன்லைன்' விளையாட்டு ஆணையம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறைகளை எளிமையாக வைத்திருக்கவே அரசு விரும்புகிறது. இதன்படி, பணம் சம்பந்தப்படாத ஆன்லைன் சமூக விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயமில்லை.

'இ-ஸ்போர்ட்ஸ்' எனப்படும், மின்னணு கருவிகளை கொண்டு விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஏற்கனவே சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக விளையாட்டுகள் மற்றும், 'இ---ஸ்போர்ட்ஸ்' ஆகியவற்றை ஊக்குவிக்க இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us