புதிய உச்சநீதிமன்ற கட்டடம் : தடை கோரி பொது நல வழக்கு
புதிய உச்சநீதிமன்ற கட்டடம் : தடை கோரி பொது நல வழக்கு
ADDED : மே 28, 2024 09:09 PM

புதுடில்லி: புதிதாக உச்சநீதிமன்ற கட்டடம் கட்டுவதற்காக தற்போதைய உச்சநீதிமன்ற கட்டடத்தை இடிக்க தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நம் நாட்டின் மிக உயரிய அமைப்பான உச்சநீதிமன்றத்தில் தற்போது 17 நீதிமன்ற அறைகள், 2 பதிவாளர்கள் அறைகள் உள்ளன. சென்டர் விஸ்டா திட்டத்தின் கீழ் இக்கட்டடத்தை முற்றிலும் இடித்துவிட்டு 27 நீதிமன்ற அறைகள், 4 பதிவாளர் அறைகளாக மறு சீரமைப்பு செய்ய வேண்டி புதிய உச்சநீதிமன்ற கட்டடம், அலுவலக வளாங்கள் கட்டுவதற்காக மத்திய அரசு ரூ. 800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தற்போதைய உச்சநீதிமன்றத்தை முழுதும் இடித்து தள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் புதிய உச்சநீதிமன்ற கட்டடத்தின் வடிவமைப்பு குறித்த மாதிரி படத்தை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தின் கருத்தை கேட்கவில்லை. எனவே நம் நாட்டின் நினைவு சின்னமாக உள்ள உச்சநீதிமன்ற கட்டடத்தை முழுதும் இடிக்க கூடாது. முழுதும் இடிப்பதற்கு பதிலாக அரசு அலுவல பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவித்திருந்தார்.